சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் டோக்கியோ திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.
சிறந்த படம்
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களின் நடித்துள்ளனர். இப்படத்திற்கு முதல் முறையாக இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிக பெரிய வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இயக்குனர் சீனுராமசாமியை பாராட்டினர்.
இந்நிலையில், இப்படம் டோக்கியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் எனும் கோல்டன் விருதை பெற்றுள்ளது. இது குறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Category ( Best Asian Film) Golden Winner
Happy to share our #Maamanithan feature film Won Tokyo Film Awards 2022
Thanks to producer @thisisysr@ilaiyaraaja@VijaySethuOffl @SGayathrie @shajichen @sreekar_prasad @mynnasukumar @studio9_suresh@CtcMediaboy @onlynikil pic.twitter.com/C6YUpQw1uk
— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) August 2, 2022

