ஆன்மீகம்சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

ஆடிப்பெருக்கு விழா : முத்துமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் !

முத்துமலை முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பெருக்கு விழா

சேலம் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில் சமீபத்தில் பெரும் விமர்சையாக திறக்கப்பட்டது. இந்த கோவிலில் முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வண்ண மாலையால் அலங்கரிக்கப்பட்டது. மேலும், மூலவருக்கு சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் நூற்றுக்கணக்கான பால்குடம் எடுத்து முருகனின் வேலுக்கு அபிஷேகம் செய்தனர். சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முத்துமலை முருகன் கோவிலில் திரண்டனர்.

Related posts