உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் இந்தியாவிலேயே படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த்
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் படித்து வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் படித்து வந்த 1387 இந்திய மாணவர்கள் இந்திய வங்கிகளில் கல்வி கடன் பெற்றுள்ளனர். அந்த கடனில் சுமார் 133 கோடி ரூபாய் வரை இன்னும் நிலுவை இருப்பதாக மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் கல்விக்கடன் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாக மத்திய நிதி அமைச்சர் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்திய மாணவர்களை இந்தியாவிலேயே படிக்க வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

