சினிமாவெள்ளித்திரை

பிரித்விராஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ரிலீஸ் தேதி

2013 ம் ஆண்டு வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதனைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கோல்டு’. கதாநாயகனாக பிரித்விராஜ் நடித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில், கோல்டு திரைப்படம் வரும் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts