அரசியல்கல்விதமிழ்நாடு

கல்லூரிகளில் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் – அமைச்சர் பொன்முடி !

அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

அமைச்சர் பொன்முடி

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘அரசு கல்லூரிகள் பல்கலைக் கழகங்களைப் பொறுத்து மொழிப்பாடங்கள் மாறிக்கொண்டு இருந்தன. இந்நிலையில், கடந்த நாட்களில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டில், எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்கள் இருக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம். அதுவும் எல்லா பல்கலைக் கழகங்களிலும் பொதுவாக பின்பற்றப்படும் என கூறியுள்ளார்.

Related posts