அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை
பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ ஷாருக்கான் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஜவான் என்று பெயரிடப்பட்டுள்ளது . இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். மேலும், இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ‘ஜவான்’ படத்தில் பிரபல ஹிந்தி நடிகையான தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

