Editor's Picksசினிமா

தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன்; இயக்குனர் பார்த்திபன் பெருமிதம்!

இரவின் நிழல் படம் ‘கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிடப்பட உள்ளதாக நடிகர் பார்த்திபன் அறிவித்திருக்கிறார்.

புதிய பாதை

இயக்குனர் பாக்யராஜ் உதவியாளராக இருந்தவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் 1989ம் ஆண்டு வெளியான புதிய பாதை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மேலும், பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ் புல் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். தனது படங்களில் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை எடுப்பவர் பர்த்திபன்.

நடிகர் பார்த்திபன் இயக்கிய "இரவின் நிழல்" படத்தின் போஸ்டரை வெளியிட உள்ள பிரபல இயக்குனர்

ஒன் மேன் ஆர்மி

இந்நிலையில் 2014ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான படம் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’. அத்திரைப்படத்தில் கதையே இல்லாமல் திரைக்கதை எழுதியிருப்பார் பார்த்திபன். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இவர் இயக்கத்தில் 2019ம் ஆண்டு ஒத்த செருப்பு என்ற படம் வெளியானது. இந்திய அளவில் ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தில் மாசிலாமணி என்ற கதாப்பாத்திரத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பார்.  விமர்சனம் ரீதியாக பல பாராட்டுக்களைப் பெற்ற இந்த படம், சர்வதேச அளவில் பல விருதுகளையும் வாங்கி குவித்தது.

கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன்" - 'இரவின் நிழல்' அப்டேட்டை வெளியிட்ட பார்த்திபன் | nakkheeran

உலக சாதனை

அதனைதொடர்ந்து பார்த்திபன் இயக்கி நடித்து வந்த படம் இரவின் நிழல். உலக அளவில் நான்-லீனியரில் சொல்லப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் விழாவில் திரையிடப்பட உள்ளதாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச திரைப்பட விழா

இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, “சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் என் இரவின் நிழல் திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன்” என்று கூறியிருக்கிறார். மேலும், அந்த விழாவில் மாதவன் இயக்கியிருக்கும் ரக்கெட்டரி படமும் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts