தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

மதம் மாற கூறி கொலை மிரட்டல் வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான வளர்மதி எனும் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

கட்டாய மத மாற்றம்

வளர்மதி என்னும் பெண் கடந்த 10 வருடமாக ராமநாதபுரம் ஆர்.எஸ்.பகுதியில் வசித்து வருகின்றார். அப்பகுதியில் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் பலர் வசிக்கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மதம் மாறிய கிறிஸ்தவர்கள் வளர்மதியை, இந்து மதத்திலிருந்து கிருஸ்துவ மதத்திற்கு மதம் மாற வேண்டும் என தொந்தரவு செய்து வற்புறுத்தியுள்ளனர். மதம் மாற கூறி தொந்தரவு செய்ததோடு மட்டுமின்றி வளர்மதியின் மகனையும் அடித்து அராஜகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயற்சி

இது குறித்து வளர்மதி ஆர்.எஸ்.மங்களம் காவல்துறையில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் காவல் துறையினர் எடுக்கவில்லை. இதனால் மிகவும் மனமுடைந்த வளர்மதி மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நடவடிக்கை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியிலிருந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து தீக்குளிக்க முயன்ற வளர்மதியை காப்பாற்றினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், வளர்மதிக்கு நடந்த கொடுமைகளை கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர், வளர்மதி சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளார்.

இவ்வாறு மதம் மாற சொல்லி , மனஉளைச்சலுக்கு ஆளாகி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts