ராஜபாளையத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒடிசா மாநிலம் மல்கான் என்ற இடத்தில் பயிற்சியின்போது உயிரிழந்தவர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
உடல் அடக்கம்
ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவை சேர்ந்த ராணுவ வீரர் செந்தில்குமார் (41). இவருக்கு சண்முகபிரியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் ஒடிசா மாநிலத்தில் உள்ள மல்கான் என்ற இடத்தில் பணியாற்றி வந்தார். அங்கு அவர் நக்சலைட் க்கு எதிரான பயிற்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார். அவரது உடலை பெங்களுரை சேர்ந்த கம்பெனி பி.எஸ்.எப் (BSF) ஆய்வாளர் தண்டபாணி தலைமையில் 10 துணை ராணுவ வீரர்கள் இன்று ராஜபாளையம் கொண்டு வந்தனர். செந்தில்குமார் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அதன்பின்னர் ராணுவ வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

