இந்தியாமருத்துவம்

கர்நாடக முதல்வருக்கு கொரோனா : மு.க ஸ்டாலின் வாழ்த்து !

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திகொண்டார். மேலும், பசவராஜ் பொம்மை இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். இதனால் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ‘கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விரைவில் குணமடைய விரும்புகிறேன்’ என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts