வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
துணை ஜனாதிபதி தேர்தல்
நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் 10ம் தேதி முடிகிறது. அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், இரு அவை எம்.பிக்கள் 788 பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஜெகதீப் தன்கர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா (80) போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணி முடிந்த பின்னர் தேர்தல் அதிகாரி உத்பால் குமார் சிங் முடிவை வெளியிடுகிறார். எனவே புதிய துணை ஜனாதிபதி யார் என்பது இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

