ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம்
எந்த குற்ற நோக்கமும் இல்லாமல் பொதுவெளியில் 5க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது சட்டவிரோதம் அல்ல என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது. ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இலங்கை அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லுரி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

