தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 200 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை
கடந்த 4 நாட்களாக தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல்ராஜா மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னை, மதுரையில் என மொத்தம் 40 இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையில் கணக்கில் வராத சொத்துக்கள் ரூ.36 கோடி ரொக்கம் மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் என ரூ.200 கோடி வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணப்பரிவர்த்தனைகள், முதலீடுகள் குறித்த ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

