உத்தர பிரதேசத்தில் பச்சை குத்தி கொண்ட 14 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எச்.ஐ.வி. தொற்று
உத்தர பிரதேசம் பராகாவன் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் மற்றும் நக்மா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் உள்பட 14 பேர் கடுமையான காய்ச்சல் காரணமாக பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மலேரியா காய்ச்சல் உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டும் காய்ச்சலின் காரணத்தை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. இதனையடுத்து இளம்பெண்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. அந்த 14 பேரும் மலிவான விலையில் பச்சை குத்தி கொண்டதில் எச்.ஐ.வி. தொற்று பரவியது தெரியவந்துள்ளது.

