முல்லைப் பெரியாறு அணை திறப்பது குறித்து முன்னரே அறிவுறுத்த வேண்டும் என கேரளா முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
அணை திறப்பு
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட்டால், 24 மணி நேரத்துக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் எனவும், முன்னேற்பாடுகள் செய்வதற்கு நன்றாக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், ‘கேரளத்தில் இடுக்கி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை தொடர்ந்தால், அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட்டால், முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் 24 மணி நேரத்துக்கு முன்னரே அறிவுறுத்த வேண்டும்’ என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

