தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் புஷ்பா 2 படத்தில் வில்லியாக பிரபல கதாநாயகி நடிக்கபோவதாக கூறப்படுகிறது.
புஷ்பா 2 வில்லி
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்து கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் சுமார் 350 கோடி வரை வசூல் செய்தது. இதன்பெயரில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், புஷ்பா-2 படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை பிரியாமணியிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

