தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சலபதி ராவ். 78 வயதாகும் இவர் 1200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தெலுங்கில் நாகார்ஜூனா, சிரஞ்சீவி, வெங்கடேஷ், என்.டி.ராமராவ் ஆகியோர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

