வசூல் சாதனை
கடந்த 2009-ம் ஆண்டு உலகமெங்கும் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அவதார்’. இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிருந்த இப்படம் பெரும் வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ திரைப்படம் கடந்த 16-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படம் இந்தியாவில் மட்டும் கடந்த 10 நாட்களில் ரூ.300 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும், உலகமெங்கும் ரூ 7 ஆயிரம் கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.