செய்தியாளர் சந்திப்பு
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை தொடர்ந்து இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’. இதில் நடிகை த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு ஸ்ரீ சத்யா இசையமைக்க, லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனிடையே இதன் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், ‘ராங்கி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய நடிகை திரிஷா, ‘நான் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக வந்த தகவலில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை’ என கூறியுள்ளார்.

