சமூகம்சினிமாதமிழ்நாடு

ரசிகர்களால் வாரிசு பட தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டம்!

இசை வெளியீட்டு விழா

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இதில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் இருக்கைகளை சேதப்படுத்தியதாக கூறப்பட்டது. சேதம் குறித்த முழு கணக்கெடுப்பு முடிந்தவுடன் வாரிசு பட தயாரிப்பாளரிடம் உரிய தொகை வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts