சினிமாவெள்ளித்திரை

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் வாரிசு படக்குழு!

வாரிசு அப்டேட் 

தளபதி விஜய், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி முதல் முறையாக இணைந்துள்ள படம் ‘வாரிசு’ தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வாரிசு படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி வாரிசு படத்தின் டிரைலர் 31-ம் தேதி வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Related posts