2 மில்லியன்
1997-ம் ஆண்டு வெளியான ‘பாரதி கண்ணம்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறியப்பட்டவர் சேரன். மேலும், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள் ஆகிய வெளி இயக்குனர்கள் படத்திலும் நடித்துள்ளார். இவர் தற்போது இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் ‘தமிழ்க்குடிமகன்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இதனிடையே அண்மையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் டீசர் இணையத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
2 நாட்களில் 20 லட்சம் மக்கள் பார்த்திருக்கிறார்கள்… இன்னும் 20 லட்சம் மக்களிடம் சொல்வதற்கான செய்தி உள்ள டீஸர் என்பது அவர்கள் பார்த்த வேகத்தில் தெரிகிறது.. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டியது நம் கடமை… pic.twitter.com/tFqV1nLRPL
— Cheran (@directorcheran) December 25, 2022

