சினிமா தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்படும் ஐடி ரெய்டு இயல்பானது தான் என்று கார்த்தி கூறியுள்ளார்.
இசை வெளியீட்டு விழா
கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் விருமன். குட்டிபுலி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை எழுதி, இயக்கியுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி விருமன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த நடிகர் கார்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
கார்த்தி பேச்சு
அப்போது அவர் பேசுகையில், ‘கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு கிராமத்து படத்தில் நடித்து உள்ளேன். மதுரை சார்ந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், சினிமா தயாரிப்பாளர்களின் இடங்களில் ஐடி ரெய்டு நடைபெறுவது இயல்பான ஒன்றுதான். அதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. தமிழ் சினிமாத்துறையில் நடக்கும் ரெய்டுகள் மட்டும் பெரிதாக செய்தி ஆகிறது’ என்று கூறியுள்ளார்.

