மாமல்லபுரத்தில் தமிழர்களின் புராதன சின்னங்களை வெளிநாட்டு செஸ் வீரர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
செஸ் வீரர்கள்
செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி வருகிற 10ம் தேதியுடன் நிறைவு பெருகிறது. இந்த போட்டியில் 186 சர்வதேச நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், நேற்று செஸ் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த ஓய்வு நாளை கழிக்கும் நோக்கில் பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் நேற்று மாமல்லபுரத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் தமிழர்களின் புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தனர். கடற்கரை கோவில், ஐந்துரதம், தமிழர்களின் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை விளக்கும் வகையில் வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை, பேரூராட்சி துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முடிவில் கடற்கரை கோவிலின் சிற்பங்களை ரசித்து பார்த்த அவர்கள் தங்கள் நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் குழுவாக நின்று புகைப்படம், புகைப்படம் எடுத்து கொண்டனர். செஸ் வீரர்கள் வருகையையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

