சமூகம்சினிமா

வைரலாகும் விக்னேஷ் சிவன் புகைப்படம்!

வைரலாகும் புகைப்படம்

நடிகர் அஜித்தின் 61-வது படமான துணிவு திரைப்படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்கியிருந்தார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்திருந்த இப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், சபரிமலை யாத்திரை சென்றிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன், அவரின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Related posts