சினிமாவெள்ளித்திரை

டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட்!

புதிய அப்டேட்

அருள்நிதி நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’. ரமேஷ் திலக், சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே 7 ஆண்டுகளுக்கு பிறகு டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க போவதாக அறிவிக்கப்பட்டது. இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று நடிகர் அருள்நிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts