அரசியல்தமிழ்நாடு

சீமானை உடனே கைது செய்ய வேண்டும் – எச்.ராஜா

பல்வேறு துறையை சேர்ந்தவர்கள், பிரதமர் மோடியை பற்றி எழுதிய மோடி-20 புத்தக்கத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

எச்.ராஜா பேச்சு 

லியனூர் பைபாஸ் ரோட்டின் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி-20 புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் எச்.ராஜா, புதுச்சேரி மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எச்.ராஜா, ‘திருமாவளவன், சீமான் ஆகியோர் தீய சக்திகளுக்கு துணை போகிறார்கள். தமிழக அரசு, திருமாவளவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருமாவளவன், சீமானை உடனே கைது செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Related posts