சமூகம்சினிமா

வாரிசு vs துணிவு – பொங்கல் ரேஸ் வின்னர் யார்?

பொங்கல் ரேஸ்

கடந்த 2014-ம் ஆண்டு விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும், அஜித் நடித்த வீரம் திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானது. அதனையடுத்து 9 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி வெளியானது. இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், வாரிசு படத்தின் வெளியீட்டு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் ‘பொங்கல் வின்னர் தி பாஸ் ரிட்டர்ன்ஸ் வாரிசு’ என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘தி ரியல் வின்னர்’ என்று குறிப்பிட்டு அஜித்தின் போஸ்டர் ஒன்றை துணிவு படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தனது ட்விட்டர் பக்கதில் வெளியிட்டார். இரு தயாரிப்பாளரும் நேரடியாக மோதிக்கொள்வது தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

Related posts