வைரலாகும் டீசர்
தமிழில் பிரபல இசையமைப்பாளராக திகழ்பவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் டார்லிங், பேச்சுலர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஐங்கரன்’, ‘ஜெயில்’ போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனையடுத்து ஜி.வி. பிரகாஷ் தற்போது ‘கள்வன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.
இந்நிலையில், ‘கள்வன்’ படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் இணையத்தில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
Here’s the teaser of #Kalvan Wishing you all happiness! @gvprakash Best wishes Team!
— Suriya Sivakumar (@Suriya_offl) January 13, 2023