ட்விட்டர் பதிவு
சுக்ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதனைத்த்தொடர்ந்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், வேலாயுதம் ஆகிய படங்களின் மூலம் பிரபல இசையமைப்பாளரானார். நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், தற்போது கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
விஜய் ஆண்டனி சமீப காலமாகவே தனது கருத்துக்களை தைரியமாக ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன்😊
நீங்க என்ன கேப்பிங்க?
— vijayantony (@vijayantony) October 19, 2022

