தீபாவளி அன்று தங்கம் வாங்கி பூஜை செய்தல் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
தங்கம் விலை
இதனால் தீபாவளிக்கு பொதுமக்கள் தங்க நகை வாங்குவது வழக்கம். கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. இதனால் மக்கள் பலரும் தங்கம் வாங்க முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,920-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 13-ம்தேதி பவுன் தங்கம் ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு மறுநாள் மேலும் குறைந்து ரூ.37,880 ஆக விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

