சமூகம்தமிழ்நாடு

சேலம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்!

திடீர் மரணம்

சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மாதையன். 59 வயதான இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணமான நிலையில் மற்றவர்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இந்நிலையில், மாதயனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே இன்று அதிகாலை 2 மணியளவில் மாதையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், இது குறித்து பள்ளப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts