சினிமாமருத்துவம்

பொன்னியின் செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்று

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -1’. இதில் நடிகர் ஜெயம் ரவி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் ‘சைரன்’, ‘ஜெ.ஆர்.30’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts