சென்னை ராயபுரத்தில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர். அடையாறில் 3 நாட்களாக தேடியும் கிடைக்காத தலை.
சென்னை மணலி
சென்னையை அடுத்த மணலி செல்வா விநாயகர் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி(65). இவர் திமுகவில் திருவெற்றியூர் – 7 வார்டு பகுதி பிரதிநிதியாக இருந்தார். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அன்று சக்கரபாணி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, சக்கரபாணியின் மனைவியும், மகன் நாகேந்திரனும் சக்கரபாணியை தேடியும் கிடைக்காததால் மணாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல் துறையில் புகார்
புகார் தொடர்பாக காவல் துறைனர் 11ம் தேதி சக்கரபாணியை தேடி வந்தனர். சக்கரபாணியின் தொலைபேசி டவர் சிக்னலை ஆய்வு செய்தபோது ராயபுரம் கிராஸ் கார்டன் 3 – தெருவை காட்டி உள்ளது. அங்கு சென்று போலீசார் வீட்டிற்குள் சென்ற சோதனை நடத்தினர். கழிவறைக்குள் பிளாஸ்டிக் கவரில் போடப்பட்டு போர்வையால் சுற்றி வைக்கப்பட்டு இருந்த தலை இல்லாத உடல் 10 துண்டுகளாக கொடூரமாக வெட்டி வைத்து இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்பு சக்கர பாணி உடல் என்று உறுதி செய்யப்பட்டு பிரேத பரிசோதனைகாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சக்கரபாணியின் மனைவி மற்றும் மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. மருத்துவமனைக்கு வந்த அவர்கள் கதறி அழுதனர். பின்பு போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து ராயபுரம் சென்ற போலீசார் கொலை நடந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தமீம் பானுவை (40) விசாரணை நடத்தினர். சக்கரபாணியிடம் தமீம் பானு வட்டிக்கு பணம் வாங்கும் விதமாக தொடர்பு ஏற்பட்டுள்ளது. 10ம் தேதி காலை ராயபுரத்தில் உள்ள தமீம் பானு வீட்டிற்கு சக்கரபாணி வந்ததாக கூறப்படுகிறது. சக்கரபாணியும் தமீம் பானு உல்லாசமாக இருந்ததை மேல் மாடியில் இருந்து பார்த்த தமீம் பானுவின் சகோதரர் வாசிம் பாஷா சக்கரபாணியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் வாசிம் பாஷாவுக்கும் சக்கர பாணிக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் வாசிம் பாஷா அங்கிருந்த கத்தியை எடுத்து சக்கரபாணியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் வீட்டின் உள்ளே ரத்த வெள்ளத்தில் சக்கரபாணி விழுந்து இறந்துள்ளார்.
அடையாற்றில் வீசபட்ட தலை
பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர் தமீம் பானு, வாசிம் பாஷா. பிறகு வீட்டில் வைத்தே சக்கரபாணியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து பிளாஸ்டிக் பையில் வைத்துள்ளார். பிறகு கைகள், கால்கள், உடல் பாகங்களை 10 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி கழிவறையில் வைத்துள்ளனர். வீட்டில் இருந்த ரத்தத்தை முழுவதுமாக சுத்தம் செய்துள்ளனர். பிறகு வாசிம் பாஷா அதே தெருவில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு உதவியோடு ஆட்டோவில் சென்று துண்டாக வெட்டப்பட்ட தலையை மட்டும் கொண்டு சென்று அடையாறு திரு.வி.க பாலத்தில் இருந்து அடையாற்றில் வீசி உள்ளார்.