வைரல் பதிவு
விஜய் ஆண்டனி கோடியில் ஒருவன் படத்தை அடுத்து தமிழசராசன், அக்னி சிறகுகள் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும், பிச்சைக்காரன் 2, கொலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவாவை வைத்து தமிழ் படம் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் இப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில், இயக்குனர் சி.எஸ்.அமுதன், நடிகர் விஜய் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கதை சொல்லட்டா சார்?. படமே முடியப் போது இப்போ வந்து என்று அவர் குறிப்பிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
Oru katha solta saar…?
Padamey mudiyapothu…ipo vanthu…#Ratham pic.twitter.com/aMabwJEPeI
— CS Amudhan (@csamudhan) September 18, 2022

