சினிமாவெள்ளித்திரை

முதல்முறையாக அதிரடி படத்தில் களமிறங்கும் நடிகர் வைபவ்!

2010-ம் ஆண்டு வெளியான கோவா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் வைபவ்.

வைபவ் புதிய படம் 

அதனைத்தொடர்ந்து மங்காத்தா, ஈசன், மேயாதமான், ஹலோ நான் பேய் பேசுறேன் போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் ‘பபூன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அசோக் வீரப்பன், கார்த்திக் சுப்புராஜிடம் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அனகா கதாநாயகியாக நடிக்க, ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘பபூன்’ படத்தை நகைச்சுவை படம் என்று கருத வேண்டாம் எனவும், இது ஒரு அரசியல் கலந்த அதிரடி படம் என்றும் இயக்குனர் அசோக் வீரப்பன் கூறியுள்ளார்.

 

Related posts