சினிமாவெள்ளித்திரை

தனுஷுடன் இணையும் பிரபல கதாநாயகி !

பிரபல கதாநாயகி

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். சாணிக் காயிதம், ராக்கி ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன இந்த படத்தை இயக்குகிறார். மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். மதன் கார்க்கி வசனம் எழுத, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related posts