உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதுக் குழந்தையை கொலை செய்த வழக்கில் 13 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
குழந்தை காணவில்லை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் ராகுல். பெயிண்ட் கடை நடத்தி வரும் இவருக்கு ரீத்து என்ற ஒருவயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அந்த ரீத்து என்ற குழந்தை தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. ஆனால், கொஞ்ச நேரமாக குழந்தையின் சத்தம் கேட்காததை கவனித்த கேசவ் ராகுல், வெளியே வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. உடனே பதற்றமடைந்த தந்தை குழந்தை ரீத்துவை அந்த பகுதி முழுவதும் தேடி இருக்கிறார். எவ்வளவு தேடியும் குழந்தை கிடைக்காததால், கேசவ் ராகுல் அலிகன்ஞ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தேடுதல் வேட்டை
இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ரீத்துவின் ஆடைகள் அருகிருந்த பள்ளி மைதானம் ஒன்றில் போலீசாரால் கண்டேடுக்கப்பட்டது. அதைதொடர்ந்து அந்தப் பள்ளியைச் சுற்றி வலைவிரித்து தேட தொடங்கியது காவல்துறை, இறுதியில் அந்த குழந்தை பள்ளியின் தண்ணீர்த் தொட்டியில் கிடந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர்.
குழந்தை மீட்பு
உடனே குழந்தை ரீத்துவை தொட்டியில் இருந்து மீட்டனர். அனால் குழந்தை அதற்குள் இறந்து விட்டது. மேலும், குழந்தையின் காலில் செங்கல் கட்டப்பட்டிருந்தது. தப்பித்து விடக்கூடாது என்பதற்காகக் கால்களில் செங்கல்லைக் கட்டியிருக்கலாம். அதனால் இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
சிறுவன் பிடிப்பட்டான்
இதுகுறித்து காவல் ஆணையர் செய்யது அலி அப்பாஸ், அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது கேசவ் ராகுலின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் 13 வயது சிறுவன் ஒருவனின் பேச்சில் பதற்றம் தெரிந்தது. அதை சுதாரித்து அதிகாரி மேலும், விசாரணையை தீவிரப்படுத்தினார். விசாரணைக்கு பயந்த சிறுவன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.
வாக்குமூலம்
இந்நிலையில் அந்த சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் `கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனது சைக்கிளை கேசவ் ராகுலின் வீட்டு வாசலில் நிறுத்தியதாகவும். அதனால், கேசவ் ராகுல் தன்னை கன்னத்தில் அடித்து விட்டார் என்றும். மேலும், என் பெற்றோரை கடுமையான வார்த்தைகளால் திட்டினார் எனவும், அதனால் கோபமடைந்ததகவும். எனவே நேற்று ரீத்து வெளியே விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து உடனே, குழந்தையைத் தூக்கிச்சென்று தண்ணிர் தொட்டியில் வீசி கொலை செய்ய முயன்றேன் என்று அந்த சிறுவன் கூறினான்.
அதனையடுத்து காவல் துறையினர் அந்த சிறுவனை, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.