இலங்கையில் அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்கள். இதனால் கோத்தபய ராஜபக்சே கப்பல் மூலமாக அங்கிருந்து தப்பினார்.
இலங்கையில் போராட்டம்
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். பின்பு போராட்டம் வன்முறையாக வெடித்ததில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். மேலும், இலங்கை அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள போவதாக தெரிவித்திருந்தனர்.
அதிபர் மாளிகை
இதனிடையே போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தார்கள். இதனால், கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். போராட்டக்காரர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கார்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், போராட்டக்காரர்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

