விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
அஞ்சல் அனுப்பும் போராட்டம்
நடந்து முடிந்த தமிழக சட்டபேரவைத் தேர்தலில் விருத்தாசலத்தை தலைமை இடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. மேலும், திமுக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் இது குறித்து தெரிவித்திருந்தார்.அதனால் கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்கக் வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் உள்ள துணை அஞ்சல் அலுவலகம் எதிரே சில அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கோரிக்கை அஞ்சல் அட்டை அனுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் ‘விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கித் தரவேண்டும் கோரிக்கை அஞ்சல் அட்டையில் எழுதி, அஞ்சலகத்தில் உள்ள அஞ்சல் பெட்டியின் உள்ளே போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்’. இதனால் அஞ்சல் அலுவலகம் முன்பு சிறிது நேரம் சல சலப்பு ஏற்பட்டது.

