‘தலைமை காவலராக பாதுகாப்பு விவகாரங்களுக்கு நானே பொறுப்பு’ என்று காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஷின்சோ அபே
ஜப்பான் நாட்டின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது திடீரென 41 வயது மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டார். முதல் குண்டு அபே மீது படவில்லை. இருப்பினும் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனக்குறைவினால் இரண்டாவதாக பாய்ந்த குண்டு அபே மீது பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், காவல்துறை அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
அப்போது அவர் பேசுகையில், ‘முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் பாதுகாப்பு வீரர்களிடம் குறை இருந்தது உண்மைதான். மேலும், இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம். இதின் தலைமை காவலராக பாதுகாப்பு விவகாரங்களுக்கு நானே பொறுப்பு. 27 ஆண்டு கால பணியில் இது போன்று ஒரு துயரமான சம்பவம் இதுவரை நடந்ததில்லை’ என்று காவல் அதிகாரி கூறினார்.

