அரசியல்இந்தியா

‘வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்துங்கள்’ – புதிய எம்.பி-க்களுக்கு மோடி அறிவுரை !

நாடாளுமன்றக் கூட்டங்களுக்குத் தவறாமல் கலந்துகொண்டு வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.

பிரதமர் மோடி அறிவுரை

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாகக் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேற்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். இதில் மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயல் மற்றும் நிர்மலா சீதாராமன் உட்பட பல மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட பாஜக எம்.பி-க்களுடன், பிரதமர் மோடி நேற்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடத்தி எம்.பியின் பொறுப்புகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், `நாடாளுமன்ற கூட்டங்களுக்குத் தவறாமல் வர வேண்டும் எனவும்,  அவையில் வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்’ என எம்.பி-க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts