தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
பதில் கடிதம்
முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார். மேலும், முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அணையின் மதகுகள் திறப்பது குறித்து கேரள அரசிடம் 24 மணி நேரத்திற்கு முன்னரே தெரிவிக்க வேண்டும் என பினராயி விஜயன் கடிதத்தில் தெரிவித்திருந்தார். அக்கடிதத்துக்கு பதில் அளித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது எனவும், கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்’ என குறிப்பிட்டுள்ளார்.

