காஞ்சிபுரம், பரந்தூர் கிராமத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இரண்டாவது விமான நிலையம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தின் சுற்றுவட்டார பகுதியில்
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதன்படி காஞ்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட ஆறு கிராமங்களும், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட ஆறு கிராமங்களும் என 12 கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளை அகற்றி விமான நிலையத்தை அமைக்க கூடாது என காஞ்சிபுரத்தில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

