‘மதத்தை வைத்து அரசியல் செய்பவர் கண்களுக்கு அரசின் திட்டங்கள் தெரியாது’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நலத்திட்ட உதவிகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் இன்று வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளித்துறை உள்ளிட்ட 30 துறைகளை சேர்ந்த பயனாளிகளுக்கு 693 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், சுமார் 340 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மு.க.ஸ்டாலின் பேச்சு
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘தமிழகத்தில் ஓராண்டு திராவிட மாடல் ஆட்சியில் 13 திருக்கோவிலுக்கு குடைமுழுக்கு நடைபெற்றுள்ளது. மேலும், 693 கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து துறையும் சமம் என்று நடத்தும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் பிற்போக்குவாதிகளுக்கு இது புரியாது’ என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

