சினிமாவெள்ளித்திரை

இணையத்தில் கவனம் பெறும் அதர்வா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் !

ஃபர்ஸ்ட் சிங்கள்

டார்லிங், 100, கூர்கா படங்களை தொடர்ந்து இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ட்ரிக்கர்’. அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். மேலும், சீதா, அருண்பாண்டியன், முனீஷ்காந்த், சின்னிஜெயந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை ப்ரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்ரிக்கர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Related posts