உலகம்தொழில்நுட்பம்வணிகம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல் அடுத்த மாதம் அறிமுகம் !

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 மாடல் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவன ஐபோன் 13 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் விற்பனை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற 50க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யத் தொடங்கியது. இது உலக நாடுகளில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தனது அடுத்த படைப்பான  ஐபோன் 14 மாடலை செப்டம்பர் மாதம் 7ம் தேதி  அன்று அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சி கலிபோர்னியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு நிறுவனங்கள் , ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts