அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன.
ஆதரவாளர்கள் மோதல்
ஓபிஎஸ் ஆதரவாளர் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் அருகே தொண்டர்கள் கல்வீச்சில் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இருதரப்பினரும் எதிர் எதிரே கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
அங்கே இரு தரப்பினரும் கல்வீசி தாக்கிக் கொண்டனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்த நிலையில், ஓபிஸ் தலைமை அலுவலத்தில் நுழைந்துள்ளார். வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தும் கைது செய்தும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் படங்கள் கிழித்து, தீவைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு நடத்துவதற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

