கல்கி எழுதிய நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”.
வழக்கு
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே ரசிகர்களில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தடை சட்டம்
இந்நிலையில், பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் இத்திரைப்படத்தை சட்ட விரோத இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

