சினிமாவெள்ளித்திரை

வரலாற்று கதைகளில் நடிப்பது என் கனவு – நடிகர் விக்ரம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் குறித்து நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.

வரலாற்று படம் 

கல்கியின் புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பு 

இந்நிலையில், நடிகர் விக்ரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நிறைய வரலாற்று கதைகள் இருக்கிறது. இது போன்ற கதைகளில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. ஆனால் எனக்கு பிடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைந்தது மிகவும் மகிழ்ச்சி’ இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts